குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நெல்லை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளில் நேற்று காலை முதல் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் குறைவாக தண்ணீர் விழுகிறது.
இதை அறிந்ததும் சுற்றுவட்டார பகுதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள். இன்னும் மழை தொடர்ந்து நீடித்தால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.