சிவகிரி அருகே கண்மாயில் மணல் அள்ளிய 3 பேருக்கு வலைவீச்சு
சிவகிரி அருகே கண்மாயில் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவிபட்டணம் செங்குளம் கண்மாய் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவர், பொக்லைன் ஆபரேட்டர் மற்றும் வாகன உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.