சாம்ராஜ்நகரில் மண்டேசாமி கோவில் தீமிதி திருவிழா

சாம்ராஜ்நகரில் உள்ள மண்டேசாமி கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-04-09 22:04 GMT
கொள்ளேகால்:

மண்டேசாமி கோவில்

  சாம்ராஜ்நகர் தாலுகா பாகேரப்பா உப்பாரா லே-அவுட்டில் பிரசித்தி பெற்ற மண்டேசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாம்ராஜ்நகர் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தீமிதி திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதாலும், திருவிழா நடத்த அரசு விதித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் மண்டேசாமி கோவிலில் திருவிழா நடந்தது.

தீமிதி திருவிழா

  இந்த திருவிழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி ஏராளமான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். தீமிதி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மண்டேசாமி கோவிலில் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், தொட்ட அங்கடி, சிக்க அங்கடி, சந்தேமரஹள்ளி வழியாக சென்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது.

  இதையடுத்து மாலையில் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக கோவில் முன்பு குண்டம் வளர்க்கப்பட்டு இருந்தது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். இதனை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

  மண்டேசாமி கோவில் தீமிதி திருவிழாவையொட்டி அந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்