ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

திருமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2022-04-09 21:49 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் நேற்று மதியம் கள்ளிகுடி லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றார். பயணிகளை இறக்கி விட்டு விட்டு கள்ளிக்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளிக்குடியை சேர்ந்த ஈஸ்வரன் மீது ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் முகமதுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஈஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்