மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2022-04-09 21:49 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள காரியேந்தல்பட்டியில் காளியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு  நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மந்தை சாவடியில் இருந்து கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களுடன் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்திற்கு  வந்தனர். பின்னர் மஞ்சுவிரட்டு தொழுவத்தில் உள்ள அனைத்து காளைக்கும் மரியாதை செய்தனர்.
அதன்பிறகு ஒவ்வொரு காளையாக தொழுவத்தில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.இதில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க முற்பட்டனர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். மஞ்சுவிரட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்