சமரச தின விழிப்புணர்வு பேரணி
மதுரையில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மதுரை,
மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று சமரச தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து நீதிபதிகள், வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி, கோர்ட்டில் இருந்து காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுவலகம் வரை நடந்தது. இந்த பேரணியை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வடமலை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தீபா முன்னிலை வகித்தார். முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் சமரச விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதன்பின் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.