வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி
வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் வாகனத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி தொடங்கி வைத்து, வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த கண்காட்சியை ஜெயங்கொண்டத்தில் உள்ள மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.