அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-09 21:06 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு மருதமுத்து ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்