மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர், பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.