பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற வேப்பந்தட்டை தாலுகா, பிம்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேசை(வயது 45) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.