பெண் மாயம்

பெண் மாயமானார்.

Update: 2022-04-09 21:04 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது 37). இவரது மனைவி பாத்திமா(24). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று ராஜீவ்காந்தி கூலி வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பி பார்த்தபோது வீட்டில் பாத்திமாவை காணவில்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜீவ் காந்தி தா.பழூர் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்