ஈரோட்டில் பரபரப்பு அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய பெண்
ஈரோட்டில் அபாய சங்கிலியை இழுத்து பெண் ரெயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் அபாய சங்கிலியை இழுத்து பெண் ரெயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அபாய சங்கிலி
கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது. சிறிதுநேரம் கழித்து அந்த ரெயில் புறப்பட்டு மெதுவாக செல்ல தொடங்கியது. அப்போது ரெயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் அவர் பதற்றத்துடன் கீழே இறங்கினார். இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்ே்வ போலீசார் உடனடியாக அந்த பெண்ணிடம் சென்று விசாரித்தனர். அப்போது, தனது மகள் உணவு பொருட்களை வாங்குவதற்காக நடைமேடையில் இறங்கினார். ஆனால் அவர் மீண்டும் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டுவிட்டது. எனவே எனது மகளை ரெயிலில் ஏற்றுவதற்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினேன் என அந்த பெண் தெரிவித்தார்.
அறிவுரை
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மகளை போலீசார் மீட்டு பாதுகாப்பாக ரெயிலில் ஏற்றினர். மேலும், அந்த பெண்ணின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வாங்கிக்கொண்டு, ரெயில் நிலையங்களில் உணவு பொருட்களை வாங்குவதற்காக இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தினால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.