மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.;

Update: 2022-04-09 20:39 GMT
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வடகிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார், நகர செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.மகாதேவன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பை வைத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பரணி, டேவிட், சேகர், ரபீக், புவனேஸ்வரி, ரேவதி, பழனிவேல், மதன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்