திருச்சி, ஏப்.10-
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவருக்கும் பாண்டி மீனா (20) என்பவருக்கும் கடந்த மாதம் 16-ந்தேதி திருமணம் நடைபெற்றது. பெங்களூர் செல்வதற்காக தனது மனைவியுடன் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு சுரேஷ் திருச்சி மத்திய பஸ்நிலையத்திற்கு வந்தார். அப்போது பாண்டி மீனா கழிப்பறைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர், வெகுநேரமாகியும் திரும்பவில்லை. புதுமாப்பிள்ளை மனைவியை தேடி சென்றுள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.