தமிழர் விடுதலை களம் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தமிழர் விடுதலை களத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-09 20:23 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தமிழர் விடுதலை களம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட தலைவர் சிவந்தி சுபாஷ் முன்னிலை வகித்தார். இதில் பகுதி செயலாளர்கள் அலெக்ஸ் பாண்டியன், அந்தோணி, மருதம் முருகன், கருங்குளம் சிவா, ஒன்றிய செயலாளர்கள் மகாராஜன், மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்