கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரியோதயத்தை பார்த்து ரசித்தனர்.

Update: 2022-04-09 20:18 GMT
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரியோதயத்தை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் கன்னியாகுமரிக்கு  அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வர தொடங்கின.
கூட்டம் அலைமோதியது 
அதைத்தொடர்ந்து வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் சூரியோதயத்தை காண கடற்கரையில் குவிந்தனர். இதனால் காலையிலேயே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சூரியோதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் ஆனந்தமாக குளித்துவிட்டு, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்தனர். பின்னர் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும் அவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். 
மாலையிலும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்