சாராயம் விற்ற தேங்காய் வியாபாரி கைது

சாராயம் விற்ற தேங்காய் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-09 20:15 GMT
வாழப்பாடி துக்கியாம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி மலையன் என்கிற ராஜா (வயது 48) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 110 லிட்டர் பாக்கெட் சாராயம் விற்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்