வங்கி ஊழியர் உள்பட 2 பேர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் வங்கி ஊழியர் வீடு உள்பட 2 பேர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
தஞ்சாவூர்;
தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் வங்கி ஊழியர் வீடு உள்பட 2 பேர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கி ஊழியர்
தஞ்சை புதுக்கோட்டை ரோடுஅந்தோணியார் நகரை சேர்ந்தவர்பிரகாஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி(வயது 34). இவர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். சுகந்தியின் பெற்றோர் இறந்துவிட்டதால் தனது வீட்டின் அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டை சுகந்தி பராமரித்து வந்தார். சுகந்தி தினமும் மாலை நேரத்தில் பெற்றோர் வீட்டில் விளக்குகளை ஆன் செய்து விட்டு, மறுநாள் காலை அணைக்க செல்வது வழக்கம்.
அதன் படி நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோர் வீட்டில் விளக்குகளை ஆன் செய்து விட்டு, மறுநாள் காலை விளக்கை அணைக்க வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்.உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன.
11 பவுன் நகைகள்
அப்போது பீரோவில் பார்த்த போது11 பவுன் நகைகள், 55 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது. வீடு பூட்டி இருப்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுகந்தி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதேபோல் தஞ்சை மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன்(30). எலக்ட்ரிசீயன். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் பின்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோதுபொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன.
அப்போது பீரோவை திறந்து 2 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து அவர் தஞ்சைமருத்துவகல்லூரி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப்-இன்ஸ்பெக்டர்செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.