பள்ளி மாணவியை கிண்டல் செய்த 3 பேர் கைது

பள்ளி மாணவியை கிண்டல் செய்த 3 பேர் கைது

Update: 2022-04-09 20:09 GMT
திருவெறும்பூர்,ஏப்.10-
திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தப்பட்டி பூசாரி தெருவை சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் பாலமுருகன் (வயது 23). இவர் மற்றும்  முத்துராஜா தெருவை சேர்ந்த வீரன் மகன் சிவா (20), அதே ெதருவை சேர்ந்த ஜெய்சங்கர் (19) ஆகிய 3 பேரும் பஸ்சில் வந்த 9-ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்தனர். இதை கண்ட அந்த மாணவின் அண்ணன் தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்துஅந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், சிவா, ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்