மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்தது.

Update: 2022-04-09 20:05 GMT
மேட்டூர்:-
கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதம் முதலே அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி முதல் 2 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம்  அணைக்கு வினாடிக்கு 1,098 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 785 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. 

மேலும் செய்திகள்