மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் காயம்

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2022-04-09 20:01 GMT
குளித்தலை, 
தோகைமலை அருகே உள்ள மனச்சனம்பட்டி காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 27). இவர் தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஜீவா (23) என்பவரை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யர்மலை- வளையப்பட்டி சாலையில் ஈச்சம்பட்டி 4 ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிதம்பரம், ஜீவா, மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த குளித்தலை அருகே உள்ள மாடுவிழுந்தான்பாறை பகுதியை சேர்ந்த சின்னராஜா (22) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்