மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-09 19:55 GMT
கரூர், 
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்