அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாத்தூர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், நகரச் செயலாளர் மணி, கட்சி பிரமுகர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.