கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது;

Update: 2022-04-09 19:50 GMT
சிவகாசி
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் நடவடிக்கையால் தற்போது கஞ்சா விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த செய்யது பாபு(46), கணேசன் (55), மணிகண்டன் என்கிற குட்டமணி(26), வீரபுத்திரன் (20) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்