சொத்து தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சொத்து தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு;

Update: 2022-04-09 19:50 GMT
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராமர் மனைவி மாரியம்மாள் (வயது 53). இவருக்கும், இவரது மைத்துனர் மாரியம்மன் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(48) என்பவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. 
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளப்பட்டி ரோட்டில் மாரியம்மாள் வந்து கொண்டி ருந்த போது அங்கு வந்த ராமகிருஷ்ணன் தகராறு செய்து அரிவாளால் மாரியம்மாளை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாரியம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்