மின்னல் தாக்கி 5 தென்னை மரங்கள் எரிந்தன

மின்னல் தாக்கி 5 தென்னை மரங்கள் எரிந்து நாசமானது.;

Update: 2022-04-09 19:37 GMT
வெள்ளியணை,
வெள்ளியணை மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பிடாமங்கம், ஜெகதாபி, மணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது உப்பிடாமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் 3 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அருகில் இருந்த தென்னை மரங்களுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். அதேபோல் கஞ்சமனூர் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் 2 தென்னை மரங்களில் மின்னல் தாக்கியதில் தீ பற்றி எரிந்து நாசமாகின.

மேலும் செய்திகள்