உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

புகழூர் அரசு பள்ளியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-09 19:23 GMT
நொய்யல், 
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நான் முதல்வன்-உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் சிவசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர்கள் விஜயன், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து முடிக்க உள்ள மாணவர்கள் கல்லூரிகளில் என்ன படிக்கலாம், எந்த படிப்பிற்கு என்ன வேலைகிடைக்கும் என்பது பற்றியும், தமிழக முதல்வரால் மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் இணையதளத்தின் முக்கியத்துவம் பற்றியும், பள்ளியின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி தூதுவர் முதுகலை ஆசிரியர் குப்புசாமி விளக்கமாக எடுத்துரைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்