போலீஸ் குடியிருப்புகளில் தூய்மை பணி
போலீஸ் குடியிருப்புகளில் தூய்மை பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் போலீஸ் நிலையங்கள், போலீஸ் குடியிருப்புகள், காவல்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாதத்தில் 2-வது சனிக்கிழமை தோறும் தூய்மை தினமாக கடைப்பிடித்து மேற்கண்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று போலீசார், தூய்மை தினத்தை கடைப்பிடித்தனர். மேலும் போலீஸ் குடியிருப்புகளில் தூய்மை பணியை போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் நகர், மார்த்தாண்டபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குடியிருப்புகளில் தூய்மை பணி நடைபெற்றது. இதனை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் பார்வையிட்டார். அப்போது கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் உடன் இருந்தார்.