தனியார் கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

எட்டிமடை அருகே தனியார் கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-09 18:01 GMT
எட்டிமடை

எட்டிமடை அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 65). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். திருமலைசாமி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். 

நேற்று முன்தினம் இவரது மனைவி மற்றும் மகன்கள் வழக்கம்போல வேலைக்கு சென்றனர். திருமலைசாமி மட்டும் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது திருமலைசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

 இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த க.க.சாவடி போலீசார் விரைந்து வந்த திருமலைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 முதற்கட்ட விசாரணையில், திருமலைசாமி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

மேலும் செய்திகள்