தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி

Update: 2022-04-09 17:56 GMT
சிமெண்டு சாலை போட வேண்டும்

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி புதுமனையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகளும் ஏற்படுகிறது. சிமெண்டு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளனர். ஆனால் இன்னும் சாலை பணியை தொடங்கவில்லை. மக்கள் நலன் கருதி சிமெண்டு சாலை பணியை தொடங்க வேண்டும்.
  -ராமலிங்கம், அணைக்கட்டு.

பயணிகள் நிழற்குடை கட்டுவார்களா?

  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து வாலாஜா, ஆற்காடு, வேலூருக்கு தினமும் ஏராளமான ெபாதுமக்கள், பள்ளி, கல்லூரிக மாணவ, மாணவிகள் செல்கிறார்கள். சென்னையில் இருந்து வாலாஜா, ஆற்காடு, வேலூர் செல்லும் மார்க்கத்தில் நிற்கும் பயணிகளுக்க நிழற்குடை வசதி இல்லை. இதனால் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது எம்.பி., எம்.எல்.ஏ.நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -முத்துகிருஷ்ணன், காவேரிப்பாக்கம்.

போளூருக்குள் பஸ்கள் வருவது இல்லை

  வேலூர் -திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை- வேலூர் இடையே அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களும், தனியார் பஸ்களும் பகல் நேரத்தில் இயக்கப்படும்போது, போளூர் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. திருவண்ணாமலை, வேலூர் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. போளூர் செல்லும் பயணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பயணிகளை பஸ் புறப்படும்போது ஏறுங்கள், எனக் கூறுகிறார்கள். அதேபோல் இரவில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் போளூருக்குள் வருவது இல்லை. பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. அதில் ஏறும் பயணிகளை பைபாசில் இறக்கி விடுகிறார்கள். இரவில் பைபாசில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே போளூர் பஸ் நிலையத்துக்கு வரும் அவல நிலை ஏற்படுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அனைத்துப் பஸ்களும் போளூருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ஆட்டோ க.முத்து, சமூக ஆர்வலர் போளூர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

  கே.வி.குப்பம் பஸ்நிலையத்தில் இருந்து மேல்மாயில் செல்லும் சாலை பெரியார் நகரில் கிழக்கு பக்கமாக கழிவுநீர் கால்வாய் அமைத்து சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு பக்கமாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர், சாலையில் ஓடி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மருத்துவமனை உள்ளது. மக்கள் பெரும்பாலும் செல்லும் வழியாகவும் இது இருக்கிறது. எனவே, புதிதாக கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற வகை செய்ய வேண்டும்.
  -கமலகண்ணன், ேக.வி.குப்பம்.

வீணாக செல்லும் குடிநீர்

  வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே பழைய பைபாஸ் சாலையில் கீழ்பகுதியில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வபோது குடிநீர் வெளியேறி சாலையோரம் தேங்குகிறது. மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் குடிநீர் வெளியே செல்வதால் அந்தச் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விழுந்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -கேசவன், வேலூர்.

  திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சி எழில் நகர் பகுதியில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு புதிதாக சிறு மின்விசை தொட்டி வைக்கப்பட்டது. இந்தத் தொட்டியில் பொருத்தப்பட்ட 2 குழாய்களும் தரமற்றதாக உள்ளதால் தொட்டில் ஏற்றப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. குழாய்களில் இருந்து தண்ணீர் வீணாகாமல் இருந்த மூடியால் அதனை சரியாக மூட இயலவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தொட்டிக்கு தரமான குழாய் அமைக்க வேண்டும்.
  -லிங்கம், திருவண்ணாமலை.

ஆபத்தான நிலையில் பாலம்

  வேலூர் கொணவட்டத்தில் இருந்து திடீர்நகர் செல்லும் வழியில், ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் கட்டிடம் அருகே கால்வாய் மீது உள்ள பாலம் சேதம் அடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் கம்பிகள் நீட்டி கொண்டும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ள இந்தப் பாலத்தைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -முகம்மதுஇஸ்மாயில், கொணவட்டம்.

மோட்டார்சைக்கிள்களால் பயணிகளுக்கு இடையூறு

  திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தில் 2 இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிழற்குடையில் பயணிகள் நிற்கும் இடத்தில் இடையூறாக மோட்டார்சைக்கிள்கள் வரிைசயாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயில் நேரத்தில் நிழலுக்காக பயணிகள் அங்கு நிற்க போதிய வசதி இல்லாமல் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராம், திருவண்ணாமலை.
  
  
  
  

மேலும் செய்திகள்