வடவள்ளியில் காதல் மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது
வடவள்ளியில் காதல் மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது செய்து செய்யப்பட்டார்.;
வடவள்ளி
கோவையை அடுத்த வடவள்ளி எப்.சி. காலனியை சேர்ந்தவர் திலீப் என்ற சஞ்சய் (வயது 25), பெயிண்டர். இவருடைய மனைவி அர்ச்சனா (19). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் திலீப்பிற்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் திலீப் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதேபோல சம்பவத்தன்று திலீப் குடித்துவிட்டு வந்த அர்ச்சனாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த திலீப், அவரது மனைவியை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.