நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது
நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த மணியின் மனைவி ராதா (வயது 59) தனது வீட்டின் பின்பக்கம் 125 லிட்டர் சாராயத்ைத மறைத்து வைத்து விற்பனை செய்தார்.
போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற ராதாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். ராதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 125 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.