வலிப்பு நோயால் சுருண்டு விழுந்த அடையாளம் தெரியாத முதியவர் சாவு

வலிப்பு நோயால் சுருண்டு விழுந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-04-09 17:26 GMT
அரக்கோணம்

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட செஞ்சிபனப்பாக்கம் ரெயில் நிலைய நடைமேடையில் 6-ந்தேதி 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென ஏற்பட்ட வலிப்பால் கீழே சுருண்டு விழுந்தார். அவரை, அங்கிருந்த பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். வலிப்பு நோயால் உயிரிழந்த முதியவர் நீல நிறத்தில் சட்டையும், லுங்கியும் அணிந்துள்ளார்.

மேலும் செய்திகள்