அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2022-04-09 17:22 GMT
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் 100 கால் மண்டபம் எதிரில் கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவில் குருக்கள் சீர்வரிசை எடுத்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க இதனை கோவில் குருக்கள் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்