விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்தார்

Update: 2022-04-09 17:17 GMT
இளையான்குடி, 
காளையார்கோவில் தாலுகா பெரிய கண்ணனூரை சேர்ந்த சகோதரர்களான வேணுகோபால் (வயது47), ராஜசேகர் (40). வேணுகோபால் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இளையான்குடி வந்துள்ளனர். அப்போது புறவழிச்சாலையில் எதிரே வந்த திருவுடையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேணு கோபால் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்