கிள்ளை அருகே முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு

கிள்ளை அருகே முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-04-09 17:15 GMT

பரங்கிப்பேட்டை, 
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி பகுதியில் முடசல் ஓடை மீனவர் கிராமத்தில் மீன்ஏலம் விடும் தளம் மற்றும் மீன் இறங்கும் தளம் உள்ளது. இங்கு மீனவர்களுக்கு போதிய இடவசதி இல்லை. மேலும் முடசல் ஓடையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் முகத்துவாரம் அடைப்பட்டு இருந்தது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து, மீன் இறங்கு தளத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். 

அதன்பேரில், தமிழக அரசு ரூ. 38 கோடி செலவில் மீன் பிடிதளம் விரிவாக்கம் பணி மற்றும் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி கருங்கல் கொட்டும் பணி நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணியை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். அப்போது, அங்கிருந்த ஒப்பந்தக்காரர் மற்றும் பொறியாளர்களிடம் அடுத்து மழை காலம் தொடங்கும் முன்பு பணிகளை தரமாக செய்து முடித்திட வேண்டும் என்று தெரிவித்தார்.


அப்போது, அவருடன் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திருவருள், உதவி பொறியாளர் முத்தமிழ்செல்வி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய்பாபு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

கோரிக்கை மனு

முன்னதாக  புதுப்பேட்டை, புதுக்குப்பம் கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, பேரூராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

மேலும் செய்திகள்