கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்
கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கொள்ளிடம்:
கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
கொள்ளிடம் பயணியர் விடுதியில் கொள்ளிடம் வட்டார அளவிலான ஊராட்சிகளை சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் சங்கம், தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சபீர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலையா கலந்துகொண்டு பேசினார்.
முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும்.தூய்மை காவலர்களுக்கு பணிப்பதிவேடு தொடங்கி மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் மற்றும் பொங்கல் கருணை தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.
ஓய்வூதியம்
ஓய்வுபெறும் தூய்மை பணியாளர்களுக்கு பணி கொடையாக ரூ.50 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கிட வேண்டும்.
தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியத்தை 5-ந் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்