மேச்சேரி கிராமத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
மேச்சேரி கிராமத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவுபடி கலவைைய அடுத்த மேச்சேரி கிராமத்தில் குழந்தை வளவ்ப்பு பற்றி ெபற்ேறாருக்கு போலீசார் விழிப்புணர்வு முகாமை நடத்தினர். முகாமுக்கு ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை தாங்கினார். கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி பங்கேற்று பிள்ளைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு கருத்துகளை கூறுைகயில் பிள்ளைகளும், பெற்றோரும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளும் பெற்றோரும் நல்ல நண்பர்களாகப் பழக வேண்டும். ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்கும் போது வேறு நபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுக்கக்கூடாது. தொலைப்பேசியில் தவறான தகவல்கள் வந்தாலும், யாரேனும் ஓ.டி.பி. நம்பர் கேட்டாலும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
முகாமில் இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சங்கர், பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.