விருத்தாசலம் அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து பெண் படுகாயம்
விருத்தாசலம் அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து பெண் படுகாயமடைந்தனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் ஜோதி லட்சுமி(வயது 38). இவர் தனது தாய் லோகநாயகியுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் லோகாநாயகி வெளியே சென்று இருந்தார். ஜோதி லட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. மேலும் மின்விசிறியும் கீழே பெயர்ந்து விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜோதிலட்சுமி படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.