ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-09 16:55 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குள தெருவில் புராதன தெய்வீகப் பாஞ்சாலி என்னும் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 21-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.  தொடர்ந்து, தினசரி  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடந்தது.


இதையொட்டி,  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடாந்து, அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 விழாவில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, இன்று(ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேகமும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில்  பரம்பரை தர்மகர்த்தா தங்க.ஆனந்தன், தெரு நாட்டாமைகள் மற்றும் மங்காங்குள தெரு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்