பாலக்கோடு அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதம்

பாலக்கோடு அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதமடைந்தது.;

Update: 2022-04-09 16:51 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள குத்தலஅள்ளியை சேர்ந்தவர் நீலமேகம். விவசாயி. இவர் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்த கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில் தோட்டத்தில் மின்கம்பி தாழ்வாக சென்றது. பலத்த காற்று வீசியதால் மின்கம்பிகள் கரும்பு சோகையில் உரசியதால் தீப்பொறி தோட்டத்தில் விழுந்து திடீரென தீப்பிடித்து கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது கரும்பு தோட்டத்திற்கு தீ பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்பு கருகி சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்