வகுப்பறையில் குட்கா வைத்திருந்த விவகாரம் பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

வகுப்பறையில் குட்கா வைத்திருந்த விவகாரம் தொடர்பாக இண்டூர் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயன்றான்.

Update: 2022-04-09 16:51 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பாக்கெட்டில் குட்கா புகையிலை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர், மாணவனை கண்டித்து மறுநாள் பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறி உள்ளார். இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவனின் தந்தையிடம் ஆசிரியர் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதையடுத்து பெற்றோர் திட்டுவார்கள் என கருதி பள்ளிக்கு சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் வீட்டுக்கு வந்த மாணவன் தான் விஷம் குடித்து விட்டதாக பெற்றோரிடம் கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்