ஏரியூர் அருகே நாட்டுத்துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விவசாயி கைது
ஏரியூர் அருகே நாட்டுத்துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி ராசாத்தி (40). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவேன் என மனைவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராசாத்தி ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.