ஆலங்குடி அருகே புனித வியாகுல அன்னை ஆலயத்தில் தவக்கால பெருவிழா

புனித வியாகுல அன்னை ஆலயத்தில் தவக்கால பெருவிழா நடைபெற்றது.;

Update: 2022-04-09 16:50 GMT
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலய தவக்கால ஆறாம் பெருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி செட்டியபட்டி பங்குதந்தை ஜேசுராஜ், ஆலங்குடி அருட் தந்தையர்கள் ஆர்.கே.குழந்தைசாமி மற்றும் கித்தேரிமுத்து மற்றும் 15-க்கும் மேற்பட்ட அருட் தந்தையர்கள் ஆகியோர் திருப்பலி நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கு பணியாளர்கள், பங்கு மக்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்