திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2022-04-09 16:47 GMT
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர்  கோவிலில் திருஞானசம்பந்தருக்கு பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டிய வரலாற்று நிகழ்வு நடந்ததாக வரலாறு. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில்  ஆண்டுதோறும்  திருமுலைப்பால் விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சீர்காழி சட்டை நாதர் கோவில் குடமுழுக்கு நடத்த பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், திருமுலைப்பால் விழா நடைபெறவில்லை. விழா நடத்தப்படாததால் திருஞானசம்பந்தருக்கு நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்