வாலாஜாவில் 210 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்

வாலாஜாவில் 210 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-09 16:36 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ரபிக் நகர் மல்லி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கோட்டிராம் மகன் ஜீவாராம் (வயது 21), மலாம்சிங் மகன் காலூசிங் (24) ஆகியோர் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 210 குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 210 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு பார்வையிட்டார்.


2 காலம்.

மேலும் செய்திகள்