காதல் திருமணம் செய்த நர்சை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த நர்சை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-09 16:35 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 25). இவர் சாமிநத்தத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியா (21) இவர் சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பின்னர் 2 பேரும் பாரதிநகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். லட்சுமி பிரியா கர்ப்பிணிியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி பிரியா சம்பவத்தன்று இரவு தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தாய் சுப்புலட்சுமி, தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் திருமணமாகி 5 மாதங்களில் லட்சுமி பிரியா உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மேல் விசாரணை நடத்தினார். இதில் லட்சுமிபிரியாவை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியது அம்பலமானது. இதனால் கணவர் முனீஸ்வரன், அவரது தந்தை முனியசாமி, தாய் கன்னியம்மாள் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்த சிப்காட் போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்