சாலையோரத்தில் மொபட்டுடன் பிணமாக கிடந்த பெண்
நத்தம் அருகே சாலையோரத்தில் மொபட்டுடன் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
செந்துறை:
நத்தம் அருகே துவரங்குறிச்சி சாலையில் இருந்து சேத்தூர் செல்லும் மங்கம்மாள் சாலை பிரிவில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அருகில் மொபட் ஒன்றும் சாய்ந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண், சேத்தூர் அருகே உள்ள சங்கரன்பாறையை சேர்ந்த தங்கராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 35) என்பது தெரியவந்தது. தங்கராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
முத்துலட்சுமி தனது மகள், மகனுடன் சேத்தூர் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மகளும், மகனும் உலுப்பகுடியில் உள்ள முத்துலட்சுமியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதனால் முத்துலட்சுமி மட்டும் சங்கரன்பாறையில் இருந்தார்.
இந்தநிலையில் தான் நேற்று காலை முத்துலட்சுமி சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முத்துலட்சுமி விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே முத்துலட்சுமியின் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.