விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
வலங்கைமான் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:-
வலங்கைமான் அருகே உள்ள புளியக்குடி ஊராட்சி அமிர்தவல்லி வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது22.) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.