வால்பாறை கோர்ட்டில் சமரசம் மற்றும் தீர்வு மையம்

வால்பாறை கோர்ட்டில் சமரசம் மற்றும் தீர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நீதிபதி கவிதா தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-09 16:24 GMT
வால்பாறை

வால்பாறை கோர்ட்டில் சமரசம் மற்றும் தீர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நீதிபதி கவிதா தொடங்கி வைத்தார்.

சமரசம் மற்றும் தீர்வு மையம்

வால்பாறை மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் அறிவுரையின் படி சமரசம் மற்றும் தீர்வு மையம் தொடங்கப்பட்டது. அதற்கான விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வால்பாறை மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா, சமரசம் மற்றும் தீர்வு மையத்தினை தொடங்கி வைத்து இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த மையத்தின் மூலம் தனிநபர் தகராறு, குடும்ப தகராறு, பணம் கொடுக்கல் தகராறு, காசோலை தகராறு, வீட்டு வாடகை தகராறு, தொழிலாளர் நலன் குறித்த பிரச்சினை ஆகிய வழக்குகளுக்கு சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணஇந்த மையம் செயல்படும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

இதன் மூலம் காலவிரயம், பண செலவு, மன உளைச்சல் ஆகியவை தடுக்கப்பட்டு வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்படும். சமரசம் மற்றும் தீர்வு மையம் மூலம் தீர்க்க முடியாத வழக்குகளை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வக்கீல் முத்துசாமி, வட்ட சட்டப்பணிகள்குழு தன்னார்வலர்கள் சுரேஷ், மூர்த்தி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்